வெள்ளி, 10 ஜூலை, 2009

செயல்...

நான் செய்வது சரி... இது தன்னம்பிக்கை
நான் செய்வது சரிதான்... இது சமாதானம்
நான் செய்வதுதான் சரி... இது ஆணவம் அல்லது அழிவின் ஆரம்பம்...
ஒரு செயல் சரியாய் தவறா என்பது
செய்யும் நபர்,விதம், செய்வதற்கான காரணம்,
செயல் நடைபெறும் இடம், செயலின் சூழல்
போன்றவற்றை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.
எனவே ஒரு செயலை செய்யும்முன்
காரணகாரியங்களை கருத்தில்கொண்டு செய்ய வேண்டும்.
எவன் ஒருவன் தன் செயலில் முழு நம்பிக்கை வைக்கிறானோ
அவன் தவறு செய்யமாட்டான்.
தான் செய்யும் செயல் அனைத்திற்கும்
சமாதானம் கூறுபவனோ மற்றவர்களை ஏமாற்றுவதாய்
நினைத்துக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வான்.
ஆனால்
நான் செய்வதுதான் சரி
என்பவன் அழிவின் வாசலில் அடியெடுத்து வைக்கிறான்...
எப்போதும் அழிவை நோக்கி செல்வதை தவிர்ப்போம்....

சனி, 4 ஜூலை, 2009

கடவுளின் பெயரால் கயமைத்தனங்கள்....

"கடவுளை மற மனிதனை நினை"
என்றார் பெரியார்...
ஆனால் அவர் வாழ்ந்த மண்ணில்
கடவுளின் பெயரால் மக்களை எமற்றுவோரின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது...
குறிப்பாக
சாமியார்கள் என்ற பெயரில்
இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை...
முன்பெல்லாம் தாங்கள் கடவுளின் தூதுவர்கள்
என்று சொல்லிவந்த கயவர் கூட்டம்
இப்போதெல்லாம் தாங்களே கடவுள் என்று எண்ணி
செயல்படுவது மட்டுமின்றிமக்களையும் நம்பசெய்து
ஏமாற்றி வருகின்றனர்...
காற்றில் இருந்து தங்க சங்கிலி வரவழைப்பதும்,
வாயிலிருந்து லிங்கம் வரவழைப்பதும் (அதுவும் தங்கத்தில்)
என தங்களை கடவுளின் அவதாரமாகவே
சித்தரித்து மகிழ்கிறது ஒரு கயவர் கூட்டம்...
உதாரணத்திற்கு இதோ ஒரு கயவனின் (சாமியாரின்) கயமைத்தனங்கள்....

இவன் ஒரு உதாரணம் மட்டுமே
இவனைப்போல் சித்து விளையாட்டு வித்துவான்கள் ஏராளம்...
ஆனால்,சிலநேரங்களில் இவர்களை சொல்லியும்
குற்றமில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது...
ஆம், சாமியார் என்ற பெயரில் அவன் சடுகுடு ஆடினாலும்
அருள்வந்து ஆடுவதாய் கூறி அவன் காலடியில் விழும் கூட்டமே
இந்த கயவர்களை வளர்த்து விடுகிறது...
எரிவதை அணைத்தால் புகைவது தானாக நின்றுவிடும் என்பார்கள் ...
அதுபோலத்தான் கயவர் (சாமியார்) கூட்டத்தின் பின்னால் செல்வதை
மக்கள் நிறுத்தினால் அந்த கூட்டம் தானாய் மறைந்து விடும்...
இல்லையேல்
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்...

ஞாயிறு, 21 ஜூன், 2009

அன்புடையார் எல்லாம் உடையவரா...?

அன்புடையார் எல்லாம் உடையார் என்றார் திருவள்ளுவர்
ஆனால் இன்றைய உலகில் அன்பை (மட்டும்) வைத்து சகமனிதனின் அன்பை பெறுவதே கடினமாகிவிட்டது...
இன்றைய காலத்தில் நீங்கள் அன்பை பெறவேண்டும் என்றால்
உங்களால் அவருக்கு (அன்பு செலுத்துவோருக்கு) ஏதாவது ஒரு பிரதிபலன் (அன்பை தவிர) இருக்க வேண்டும்...
இந்த உண்மையை உணர யாராவது ஒருவரிடம் அன்பை மட்டும் காட்டுங்கள்...
அப்போது தெரியும் அன்பின் மதிப்பு...!(?)
அது யாராக இருந்தாலும் சரி...
நீங்கள் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்தரக்கூடிய நிலையில் இருந்தால் மட்டுமே
உங்களுக்கு அன்பு கிட்டும்...
நீங்கள் அடுத்தவர் மீது காட்டும் அன்பிற்கும் பயன் இருக்கும்...
இதை மனதில் வைத்து எப்போதும் செயல்படுவோம்...
திருவள்ளுவரின் வாக்கை மெய்யாக்குவோம்....

சனி, 6 ஜூன், 2009

"போலி"

போக்கிரிகளைவிட ஆயிரம் மடங்கு கீழ்த்தரமானவன் "போலி"...
இங்கே போலிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது நமது கடமை...
உன்னை சுற்றி எது நடந்தாலும், ஏன்? எதற்கு? என காரணம் கேள்,
போலிகளை நீ எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்...
"எல்லாம் செய்வேன் என்பவன் எதையும் செய்யமாட்டான் "
என்ற ஒற்றை வரியை எப்போதும் நினைவில் கொள்...
நீ நிச்சயம் ஈமாறமாட்டாய்...
அப்படியே நீ ஏமாற்றப்பட்டாலும்
உன்னை ஏமாற்றியவனின் போலித்தனத்தை உலகறிய செய்...
அப்போதுதான் மீண்டும் ஒரு போலி உருவாகாது ....

திங்கள், 25 மே, 2009

என்று மாறும் இந்த இழிநிலை....

ஆஸ்திரியாவில் ஒரு குருதுவாரா தாக்கப்பட்டதற்காக
ஒரே நாளில் பஞ்சாப் மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளான் சீக்கியன்...
ஆனால்
தன் இனத்தையே அழிக்கும்போதும்
கைகட்டி, வாய்மூடி வேடிக்கை பார்க்கிறான் தமிழன்...
என்று மாறும் இந்த இழிநிலை....

செவ்வாய், 24 மார்ச், 2009

எதற்கும் தயார்...

தன்மானத்தை விற்கத் தயார்...
கடந்த காலத்தை மறக்கத் தயார்....
கட்சிகளை உடைக்கத் தயார்...
கொள்கைகளை இழக்கத் தயார்.....
வாக்குறுதிகளை வழங்கத் தயார்...
எங்களுக்கு தேவை
எளிதில் வெல்லும்
கூட்டணி மட்டுமே....
இப்படிக்கு
தமிழக அரசியல்வாதிகள்
(எ)
தேர்தல் வியாபாரிகள்.