வியாழன், 4 மார்ச், 2010

புத்தி வ(ள)ரட்டும்...

உபதேசம் எல்லாம் ஊருக்குதான் என்பதை
காட்சிகள் மூலமே சொல்லியிருக்கிறார் நித்யானந்தா...



நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சல்லாபிக்கும்
காட்சிகள் வெளியானதன் மூலம் தானும் ஒரு பிரேமானந்தா என்பதை
நிருபித்துள்ள நித்யானந்தா (எ) ராஜசேகரனுக்கு ஊருக்கு ஊர் மடம் வேறு,
அதுவும் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சற்றும் சளைக்காத வகையில்...
திருவண்ணாமலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவனுக்கு
எங்கிருந்து வந்தது இவ்வளவு சொத்துக்கள்.
அவ்வளவும் பக்தி என்ற பெயரால் அல்லது பக்தி என்ற போர்வையில்
மக்கள் கொடுத்ததே...
ஏதாவது பிரச்சனையில் சிக்கும்வரை சாமியார் காலடியில் விழுந்து கிடப்பது
பிரச்னை என்றவுடன் இவன நம்பி ஏமாந்துவிட்டேனே..என்று கூறுவதையே
வழக்கமாக கொண்டுள்ளது ஒரு கூட்டம். இன்னும் ஒரு
கூட்டமோ என்ன நடந்தாலும் திருந்துவதாக இல்லை.அப்படிதான்,
பிரேமானந்தா, சதுர்வேதி,திவேதி, என காமாந்த சாமியார்கள் வரிசையில்
இடம்பிடித்தாலும் நித்யானந்தாவிற்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம்
இன்னும் "எங்க சாமிக்கு ஒன்னுமே தெரியாது" அவரு பப்பா என்றெல்ல்லாம்
சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோன்றவர்கள்தான் சாமியார்களை உருவாக்குகிறார்கள்...
தனி ஒரு மனிதன் சாமியார் மயக்கத்திலிருந்து விடுபடாதவரை
நித்யானந்தாக்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்...
இனி எவனாவது
கதவைத்திற காற்று வரட்டும்...என்று சொன்னால் செருப்பால் அடி புத்தி வரட்டும்....